Skip to product information
1 of 1

Uma Sahasram (Tamil)

Uma Sahasram (Tamil)

Paperback

Regular price $29.99 USD
Regular price $50.00 USD Sale price $29.99 USD
Sale Sold out

Description -

Uma Sahasram (tamil)
Language - Sanskrit Text with Tamil Translation

கணபதி முனிவர் அருணாசலேஸ்வரரைப் புகழ்ந்து ஆயிரம் பாடல்களை (ஹர ஸஹஸ்ரம்) எழுதியதைப் போன்று, ஒரு சிறந்த குருவை அடைய அருள்காட்டிய உமையைப் புகழ்ந்து பாட எண்ணினார். இருபதே நாட்களில் ஆயிரம் செய்யுள்களை எழுதுவதென முடிவெடுத்து 1907-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் பகவான் ஸ்ரீ ரமணரின் ஆசியுடன் உமா ஸஹஸ்ரத்தை இயற்றத் தொடங்கினார். 19-ஆம் நாள்வரை ஏறக்குறைய எழுநூறு பாடல்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. 20-ஆம் நாள் இரவு ஐந்து சீடர்களுடன் நாயனா மாமரக் குகையில் அமர்ந்தார். பகவான் ரமண மகரிஷியும் வந்து நாயனாவுக்குச் சற்றுத் தூரத்தில் அமர்ந்தார். ஒரே சமயத்தில் ஐந்து சீடர்களுக்கும் நாயனா செய்யுட்களை கூறத் தொடங்கினார். அவரது வாயிலிருந்து சுலோகங்கள் மழைபோல் பொழியத் தொடங்கின. நள்ளிரவு நெருங்குவதற்குள் மீதி சுலோகங்கள் அனைத்தையும் ஆசுகவிகளாகப் பொழிந்து தள்ளிவிட்டார். அதுவரை கண்மூடி அமைதியுடன் வீற்றிருந்த ரமணர் கண்களை மெல்லத் திறந்து அங்கிருந்தோரிடம் தான் அதுவரை கூறியவை அனைத்தையும் எழுதி முடித்தாயிற்றா? என்று வினவினார். அப்போதே நாயனா, அவையனைத்தும் பகவான் ரமணரின் அருட் செயலென, ஆசியென உணர்ந்தார். தம்மீது அருள்மழை பொழிந்த அன்பு குருவைப் புகழ்ந்து ஒரு சுலோகத்தை இயற்றினார். அதற்குப் பின்னர் நாயனா உமா ஸஹஸ்ரத்தில் உள்ள பாடல்களை ஏறக்குறைய எட்டுமுறை திருத்தியமைத்தும், பகவான் ரமணர் ஆசியுடன் இயற்றிய (சுமார் முந்நூறு) இறுதிப் பாடல்களை மட்டும் மாற்றம் ஏதும் செய்யாமல் அப்படியே அமைத்திருந்தார்.

View full details